Tuesday, 20 March 2012

பங்கு வர்த்தகம் - தின வர்த்தகம் (INTRADAY TRADING)

சென்ற பகுதியில் குறுகிய கால முதலீடு (SHORT TERM INVESTMENT) பற்றி பார்த்தோம். இன்று பங்குச்சந்தையில் தின வர்த்தகம் (INTRADAY TRADING) செய்யும் முறைகள் பற்றி பார்ப்போம்.

தின வர்த்தகம் (INTRADAY TRADING): தின வர்த்தகம் என்பது தினமும் காலையில் பங்குகளை வாங்கி அன்று மாலை பங்கு சந்தை முடியும் முன் விற்று விடுவார்கள். இதில் காலையில் வாங்கத்தான் வேண்டும் என்பதில்லை, காலையில் விற்று விட்டு (அதாவது நம்மிடம் பங்கு இல்லாமலேயே விற்றுவிட்டு), அன்றைய தினம் முடியும் முன் திரும்ப வாங்கிக்கொள்ளலாம். வாங்குவதற்கும் விற்பதற்குமுள்ள வித்தியாசம் தான் லாபம்/நஸ்டம். இது மிக மிக RISK ஆன ஒரு விஷயம். தின வர்த்தகத்தில் அதிக லாபம் பார்க்கலாம் என்று நினைக்கும் அதே அளவுக்கு நஷ்டமாகவும் வாய்ப்பு இருக்கிறது என்பதை மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். எங்கே RISK அதிகமோ அங்கே லாபம் அதிகம் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

முதலில் நீங்கள் என்ன செய்ய ஆசைப்படுகிறீர்கள் என்பதை தெளிவாக நிர்ணயித்துக் கொள்ளவேண்டும், அதற்கேற்ற மாதிரி நம்முடைய திட்டமிடலும் இருக்க வேண்டும். நீங்கள் முதலீட்டாளராக விரும்புகிறீர்களா அல்லது வர்த்தகராக விரும்புகிறீர்களா என்று முடிவு செய்வதற்கு முன் நாம் சில அடிப்படை விஷயங்களை பற்றி தெரிந்துகொள்ளவேண்டும். தெரிந்துகொண்ட பிறகு நீங்களே முடிவு செய்யலாம்...!!

நமது அடுத்த பகுதியில் அவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

மேலும் பங்கு வர்த்தகம் குறித்த அனைத்து சந்தேகங்களுக்க்கும் pangusanthaiulagam@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.

இந்த வலைப்பக்கம் குறித்த தங்கள் கருத்துகளை COMMENT BOX இல் பதிவு செய்யவும்.

வலைப்பக்கம் பிடித்திருந்தால் FOLLOW செய்யவும்,, மற்றும் நண்பர்களுக்கு SHARE பண்ணவும்

1 comment: