Saturday 17 March 2012

பங்கு வர்த்தகம் - குறுகிய கால முதலீடு

சென்ற பகுதியில் நீண்ட கால முதலீடு (LONG TERM INVESTMENT) பற்றி பார்த்தோம். இன்று பங்குச்சந்தையில் குறுகிய காலத்தில் (SHORT TERM) வர்த்தகம் (TRADING) செய்யும் முறைகள் பற்றி பார்ப்போம்.

குறுகிய கால முதலீடு (SHORT AND MEDIUM TERM INVESTMENT) : இந்த வகை முதலீட்டாளர்கள் பங்கு சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ற மாதிரி பங்குகளை வாங்கி விற்று லாபம் பார்பார்கள். இந்த குறுகிய காலம் என்பதற்கு எவ்வளவு காலம் என்று சொல்ல முடியாது. சில நேரம் ஒரு வருடம் இருக்கலாம், சில நேரம் ஆறு மாதம் இருக்கலாம், அவ்வளவு ஏன்? ஒரு வாரம் கூட இருக்கலாம். அதாவது பங்குகளை வாங்கி ஒரு வாரத்திற்குள்ளாக கூட விற்று விடுவார்கள். சிலர் தாங்கள் வாங்கிய பங்கின் விலை குறிப்பிடத்தக்க அளவில் ஏறும் பட்சத்தில் அன்றைய தினமோ அல்லது அடுத்த நாளிலோ கூட விற்றுவிடுவார்கள்.

இவ்வகை வர்த்தகத்தை பெரும்பாலோர் விரும்புகின்றனர், ஏனெனில் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தைப் பற்றி தெரிந்தபின் வர்த்தகம் செய்வதால், அவர்கள் எதிர்பார்க்கும் அல்லது  நிர்ணயித்துள்ள காலக்கெடுவுக்கு முன்னமே கூட அவர்கள் விற்று லாபமடைந்து விடுவார்கள். இதன்மூலம் தின வர்த்தகம் செய்வோர் நட்டமடைந்து அடுத்த நாள் அதே பங்கு லாபத்துடன் வர்த்தகமாவதையும், நீண்ட கால முதலீட்டார்கள் ஒரு பங்கு நன்கு விலை ஏறி, இறங்கி பின் மீண்டும் ஏறும்போது "ஆகா, நாம் அன்று விற்று இன்று வாங்கி இருந்தால் நல்ல லாபம் கிடைத்திருக்குமே" என்பது போன்ற வருத்தங்கள் இருக்காது.

எனினும் குறுகிய கால முதலீட்டார்கள் தங்களின் லாபத்தை குறிப்பிட்ட அளவுடன் வர்த்தகத்தை முடித்துக் கொள்வதால், பின் அதே பங்கு பல மடங்கு லாபமடையும்போது, வைத்திருந்தால் வேறு வர்த்தகம் ஏதும் செய்யாமல் நிம்மதியாக இருந்திருக்கலாம் என்ற வருத்தம் ஏற்படத்தான் செய்யும்.

குறுகிய கால முதலீட்டில் ஈடுபடுபவர்கள் தாங்கள் வாங்கும் பங்கு, அதன் எண்ணிக்கை, வைக்க விரும்பும் காலக்கெடு, எதிர்பார்க்கும் லாபம், அதற்கான STOPLOSS ஆகியவற்றை முன்கூட்டியே தீர்மானித்து விடவேண்டும்.

நமது அடுத்த பகுதியில் தின வர்த்தகத்தைப் பற்றி விரிவாகப்பார்ப்போம்.



மேலும் பங்கு வர்த்தகம் குறித்த அனைத்து சந்தேகங்களுக்க்கும் pangusanthaiulagam@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.

இந்த வலைப்பக்கம் குறித்த தங்கள் கருத்துகளை COMMENT BOX இல் பதிவு செய்யவும்.

வலைப்பக்கம் பிடித்திருந்தால் FOLLOW செய்யவும்,, மற்றும் நண்பர்களுக்கு SHARE பண்ணவும்

No comments:

Post a Comment