நான்
பரிந்துரை அளிக்கத் தொடங்கி இன்றுடன் 4 வாரங்கள் முடிவடைந்து விட்டதால்,
நமது வர்த்தக முடிவுகளை ஒருமுறை அலசிவிட்டு பின்பு எதிர்கால வர்த்தகத்தைப்
பற்றி சிந்திப்போம். கீழே கொடுக்கப்பட்டுள்ள வர்த்தக முடிவுகளை
பார்த்துவிட்டு பின்பு அவற்றைப் பற்றி பேசுவோம்.
கடந்த
4 வாரங்களில் நான் பரிந்துரையில் அளித்த பங்குகள் 18 நாட்கள் மட்டுமே
வர்த்தகத்தில் பங்கேற்றன. அவற்றில் 3 நாட்கள் நட்டத்துடனும், 15 நாட்கள்
லாபத்துடனும் வர்த்தகமாகியுள்ளது.
பொதுவாக
நான் அளிக்கும் பரிந்துரைகள் காலை நேரத்தில் சந்தை தொடங்கியபின்
கணக்கிடுவதுதான் சரியான வழிமுறையாகும், காலை நேரத்தில் பதிய முடியாத
காரணத்தினால் சில நாட்கள் பரிந்துரை விலைக்கு நமது பங்குகள் வருவதில்லை,
இருப்பினும் நமது பரிந்துரைகள் நல்ல லாபத்தையே அளித்துள்ளன. அவற்றின்
முடிவுகளை நம் முதலீட்டுடன் ஒப்பிட்டுப் பார்ப்போம்.
இதுவரை
செய்த
மொத்த
முதலீடு –369408.05
இதுவரை
கிடைத்த மொத்த
லாபம்–20960.00
லாப
சதவீதம் - 5.67%
சராசரி தினசரி முதலீடு –20522.70
இதுவரை
கிடைத்த மொத்த
லாபம்–20960.00
லாப
சதவீதம் - 102.13%
அதாவது
நாம் நமது முதலீட்டிற்கு மேல் லாபம் ஈட்டியிருக்கிறோம், இது நமக்கு
மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது, மென்மேலும் இதே நிலை தொடரவேண்டும் என்று
விரும்புகிறேன்.
நம்
அனைவருக்கும் நாம் எந்த பங்கில் வர்த்தகம் செய்கிறோம் என்பதில் தினம்
தினம் குழப்பங்கள் ஏற்படாமல் இருப்பதற்காக, எனது பரிந்துரையில் நான்
அடிக்கடி நிறுவனங்களை மாற்றுவதில்லை, இதனால் நாம் குறிப்பிட்ட நிறுவனங்களை
மட்டும் கவனித்துக் கொள்ள முடியும்.
நமது
பரிந்துரைகளை அனைவரும் புரிந்து பின் வர்த்தகம் செய்வது அனைவருக்கும் நல்ல
லாபத்தை அளிக்கும், 5 நிறுவனங்களிலும் வர்த்தகம் செய்ய இயலாதவர்கள்
மற்றும் விரும்பாதவர்கள் அவர்கள் விரும்பும் நிறுவனங்களை தேர்ந்தெடுத்து
வர்த்தகம் செய்யவும். ஆனால் ஒரு நிறுவனத்தில் மட்டும் வர்த்தகம் செய்வது
மிகவும் ஆபத்தானது.
மேலும் பங்கு வர்த்தகம் குறித்த அனைத்து சந்தேகங்களுக்க்கும் pangusanthaiulagam@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.
இந்த வலைப்பக்கம் குறித்த தங்கள் கருத்துகளை COMMENT BOX இல் பதிவு செய்யவும்.
வலைப்பக்கம் பிடித்திருந்தால் FOLLOW செய்யவும்,, மற்றும் நண்பர்களுக்கு SHARE பண்ணவும்
Good, keep it up
ReplyDeletewel done friend
ReplyDelete