அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.
பல
நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க இன்று முதல் பங்குச்சந்தை குறித்த பல
அடிப்படை விசயங்களைப் பற்றி நான் அறிந்து கொண்டதை உங்களுடன் பகிர்ந்து
கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இவையனைத்தும் உங்களுக்கு உதவிகரமாக
இருக்கும் என்று நம்புகிறேன்.
பங்கு முதலீடு (SHARE INVESTMENT):
ஒரு பெரிய அளவிலான மூலதனத்தை திரட்டி, உதாரணமாக ஆயிரக்கணக்கான கோடிகளில் முதலீடு செய்வது என்பது ஒருவரால் இயலாத காரியம். எனவே பணத்தை நிறைய பேரிடம் முதலீட்டை சிறு சிறு பாகங்களாக பிரித்து (பங்கு - அதாவது SHARE) ஒவ்வொருவரும் பங்குகளை வாங்கி அந்த நிறுவனத்தில் முதலீடு செய்வது தான் பங்கு முதலீடு.
ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கி, விற்க உருவாக்க பட்டதுதான் பங்கு சந்தை. பங்குகளை எப்படி வாங்குவது, விற்பது, அதற்கு என்ன தேவை என்பதை இப்போது பார்ப்போம்.
1) முதலில் பணம் தேவை என்பது அனைவருக்கும் தெரியும், அதை கையில் வைத்திருக்கக்கூடாது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் சேமிப்புக்கணக்கில் வைத்திருக்கவேண்டும், காசோலை (CHEQUE BOOK) வசதி அவசியம். INTERNET BANKING வசதி இருந்தால் மிகவும் நல்லது.
2) DEMAT கணக்கு வைத்திருக்க வேண்டும், DEMAT ACCOUNT ஐ நாம் நமது வங்கியிலோ அல்லது பங்கு தரகரிடமோ வைத்துக்கொள்ளலாம். அதற்கு நம்மிடம் வருடத்திற்கு ஒரு முறை பணம் செலுத்தவேண்டும் அல்லது நமது கணக்கிலிருந்து எடுத்துக்கொள்வார்கள். DEMAT கணக்கு என்பது நம்முடைய வங்கியிலுள்ள சேமிப்புக்கணக்கு போலவே, இங்கு நம்முடைய பங்குச்சந்தை வரவு செலவுகளை வைத்துக்கொள்ள உதவும் கணக்காகும். நாம் பங்குகளை வாங்கும்போது அதற்கான தொகையைக் கழித்துக் கொண்டு அதற்கு பதிலாக பங்குகளை வரவு வைக்கப்படும். நாம் பங்குகளை விற்கும்போது விற்ற பங்கு எண்ணிக்கையை கழித்துக் கொண்டு அதற்கு பதிலாக விற்ற தொகையை வரவில் வைக்கப்படும். வர்த்தகத்தில் ஈடுபடும்போது உங்களால் முழுமையாக புரிந்து கொள்ளமுடியும்.
3) TRADING ACCOUNT வைத்திருக்கவேண்டும். அது என்ன இன்னொரு ACCOUNT என்று யோசிக்காதீர்கள். TRADING ACCOUNT என்பது நாம் பங்கு தரகரிடம் வைத்துக்கொள்ளும் ஒரு வகை வரவு செலவு கணக்காகும். தரகரிடம் DEMAT ACCOUNT வைத்திருந்தால் TRADING ACCOUNT அதனுடன் இணைந்தே இருக்கும். நாம் DEMAT ACCOUNT ஐ ஏதாவது வங்கிகளில் வைத்திருந்தால் TRADING ACCOUNT ஐ நாம் பங்கு தரகரிடம் வைத்திருக்க வேண்டும். இதற்கான கட்டணங்கள் தரகருக்கு தரகர் மாறுபடும். TRADING ACCOUNT மூலம் மட்டுமே நமது DEMAT கணக்கிலுள்ள பங்குகளை வாங்கவோ, விற்கவோ முடியும், அதுவும் தரகரின் வழியாக மட்டுமே செய்யமுடியும். அதற்கு தரகர் தரகு கூலியை (BROKERAGE) நமது கணக்கிலிருந்து எடுத்துக்கொள்வார், அது தரகருக்கு தரகர் மாறுபடும்.
இப்போது என்ன தேவை என்று தெரிந்து கொண்டீர்கள். சரி, இப்போது பங்குகளை எப்படி வாங்குவது, விற்பது என்று பார்ப்போம்.
1) நாம் நிறுவனத்தின் பங்கு வாங்கி (இங்கு நீங்களும் வியாபாரி தான்) முதலீடு செய்ய விரும்பினால் நேரடியாக நிறுவனத்திலிருந்து வாங்க முடியாது. பங்கு தரகரின் மூலம் பங்கை விற்க வரும் நம்மைப் போன்ற வியாபாரியிடம் தான் வாங்க வேண்டும். விற்கும் போது இதேபோல வாங்க வரும் வியாபாரியிடம் தான் விற்க வேண்டும்.
2) வியாபாரியை எப்படி சந்திப்பது, அதற்கு தான் பங்கு சந்தை உதவுகிறது. வாங்க விற்க விரும்புபவர்கள் அவர்கள் நிர்ணயிக்கும் விலையையும், விற்க விரும்பும் பங்கு எண்ணிக்கையையும் பதிவு செய்தால், விலை விபரப்படி சந்தையில் பட்டியலிடப்படும். வாங்க, விற்கும் விலைகள் பொருந்தும் பட்சத்தில் வியாபாரம் முடிந்துவிடும்.
3) முதலீடு செய்த நிறுவனம் பங்குகளை திரும்ப வாங்காதா என்ற கேள்வி எழலாம். ஒரு நிறுவனம் தான் வெளியிட்ட பங்குகளை திரும்ப வாங்குகிறது என்றால், அது தன்னுடைய மூலதனத்தை திருப்பி கொடுக்கிறது என்று அர்த்தம். அப்படி திருப்பி கொடுத்தால் அந்த நிறுவனம் எப்படி தொழில் செய்ய முடியும்? ஆக ஒரு நிறுவனம் பங்கு வெளியிட்டு பணம் பெற்றுகொண்டது என்றால், அந்த பணத்தை அந்த நிறுவனம் திருப்பி தராது. நிறுவனத்தை மூடும் சூழ்நிலை வந்தால் மட்டுமே, மூடியதும் கடன்களை எல்லாம் அடைத்து விட்டு மீதி ஏதாவது பணம் இருந்தால் மட்டுமே ஷேர் வாங்கியவருக்கு பணத்தை திருப்பி கொடுக்கும்.
4) நிறுவனத்தில் நம் முதலீட்டை நிர்வகிப்பது யார்? நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் எண்ணிக்கையில் அதிகம் என்பதால் அவர்களால் நிர்வாகம் செய்ய முடியாது. எனவே நிறுவனத்தின் நிர்வாகம் குறிப்பிட்ட சில நபர்களிடம் ஒப்படைக்கப்படும். நிறுவனத்தை நிர்வகிக்கும் நபர்களை Board of Directors என்று சொல்கிறோம். நிறுவனத்தை ஆரம்பிக்க முயற்சி எடுத்தவர் நிறுவனத்தில் அதிக பங்கு வைத்திருப்பார். அவர் தலைமை பொறுப்பில் இருப்பார்.
5) நாம் மேலே கண்ட அனைத்துமே ஏற்கனவே உள்ள நிறுவனத்தில் பங்கு முதலீடு செய்வதைப் பற்றியதாகும். ஒரு நிறுவனம் ஆரம்பிக்கும் போது ஆரம்ப பங்கு வெளியிடும், அதாவது ஒரு நிறுவனம் முதன்முறையாக ஷேர் வெளியிடும் போது IPO (Initial Public Offer), அதன் நிர்ணய விலை பிடித்திருக்கும் பட்சத்தில் வெளியிடப்படும் பங்குகளை நாம் நேரடியாக கம்பனியிடமே வாங்கிகொள்ளலாம்.
6) ஒரு நிறுவனம் அதன் விரிவாக்கதிற்கு பணம் தேவை படும் போது பங்கு வெளியிடும், அப்படி வெளியிடப்படும் பங்குகளை நாம் நேரடியாக நிறுவனத்திடமே வாங்கிகொள்ளலாம். அதை FPO (Follow on Puplic Offer) என்கிறோம்.
7) ஒரு நிறுவனம் நல்ல நிலையில் செயல்படுகிறது என்பதை முடிவு செய்து பங்குகளை நாம் வாங்க வேண்டும் என்றால் நாம் நாட வேண்டிய இடம் பங்கு சந்தை. பங்கு சந்தையில் பங்குகள் பரிவர்த்தனை செய்வதில் உள்ள பணம் பங்கு வாங்குபவர் விற்பவரோடு முடிந்து விடும். இப்போது நமக்கு ஒரு சந்தேகம் வரலாம். நிறுவனத்திற்கு எந்தவித லாபமும் இல்லாமல் ஏன் பங்குகளை பங்கு சந்தையில் அனுமதிக்கிறது? ஏனென்றால் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் எப்போது வேண்டுமானாலும் நம் பணத்தை நாம் பங்கு சந்தை மூலமாக பங்குகளை விற்று எடுத்துக்கொள்ள முடியும் என்று முதலீட்டளர்களுக்கு நம்பிக்கை வரவேண்டும். அதுவுமில்லாமல், பங்கு சந்தையில் பங்குகளின் விலை அதிகமானால் நிறுவனத்தை ஆரம்பித்தவருடைய பங்குகளின் மதிப்பும் கூடும். இதுதான் பங்கு பரிவர்த்தனை அல்லது பங்கு சந்தையின் அடிப்படை.
பங்குச்சந்தையைப் பற்றிய போதுமான தகவல்களை அறிந்து கொண்டோம். இனி பங்குவர்த்தகம், பங்குகளை தேர்வு செய்யும் முறைகளைப் பிறகு பார்ப்போம்.
மேலும் பங்கு வர்த்தகம் குறித்த அனைத்து சந்தேகங்களுக்க்கும் pangusanthaiulagam@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.
இந்த வலைப்பக்கம் குறித்த தங்கள் கருத்துகளை COMMENT BOX இல் பதிவு செய்யவும்.
அன்பு நண்பரே
ReplyDeleteஅருமையான பதிவு
intraday trading செய்வதற்கு எந்த சாப்ட்வேர்
பயன்படுத்தவேண்டும்
டெமோ செய்ய முடியுமா?
மிக்க நன்றி நண்பரே
Vlc media player
DeleteI really like this post, its very useful
ReplyDeleteமிகவும் அருமை
ReplyDeleteமிகவும் அருமை
ReplyDeleteமிகவும் அருமை
ReplyDeleteஅருமையான பதிவு நன்றி
ReplyDeleteஅருமையான பதிவு நன்றி
ReplyDeleteதெளிவான பதிவு நன்றி
ReplyDeleteபயனுல்ல பதிவு.
ReplyDeleteBroker தெரிவு செய்வது எப்படி?
ReplyDeleteமேலும் தெரிந்துகொள்ள உதவுங்கள்
ReplyDeleteநன்றி.
மேலும் தெரிந்துகொள்ள உதவுங்கள்
ReplyDeleteநன்றி.
I don't like this is not much useful for me
ReplyDeleteEver greren for beginners
ReplyDeleteEver green for beginners
ReplyDelete