Tuesday, 28 February 2012

INTRADAY செய்யும்போது கவனிக்க வேண்டியவை

STOPLOSS:
  • STOPLOSS போடாமல் வர்த்தகம் செய்யக்கூடாது. 
  • முதலில் நான் அளித்துள்ள STOPLOSS ன் படி வர்த்தகத்தை ஆரம்பிக்கவும்.
  • பின்பு முதல் TARGET ACHIEVE ஆனவுடன், இரண்டாவது TARGET வரும் வரை முதல் TARGET ஐ STOPLOSS ஆக மாற்றவும்.
  • இதன்மூலம் இரண்டாவது TARGET ACHIEVE ஆகாமல் போனாலும், நீங்கள் பங்குச்சந்தையை பார்க்காமல் போனாலும் உங்களுக்கு முதல் TARGET இல் உங்கள் வர்த்தகம் முடிந்துவிடும்.
  • நீங்கள் பங்குச்சந்தையை கவனிப்பவராக இருந்தால், STOPLOSS ஐ மாற்றி முதல் TARGET மற்றும் இரண்டாவது TARGET க்கும் இடைப்பட்ட விலையை மாற்றிக்கொண்டே இருக்கலாம்.
  • இதன்மூலம் ஐய்யோ, இந்த விலை வந்ததே, ஏமாந்து விட்டோமே என்று வருத்தப்படத்தேவையில்லை.

PRICE AND QUANTITY:
  • பங்கு விலையின்படி வர்த்தகம் செய்யும் எண்ணிக்கை வரம்பு மிகவும் முக்கியம். என்னுடைய வர்த்தகத்திற்க நான் வைத்துள்ள அளவுகோல்கள்:
    • ரூபாய் 500.00 வரை வர்த்தகமாகும் பங்குகள் - 200 பங்குகள்
    • ரூபாய் 1000.00 வரை வர்த்தகமாகும் பங்குகள் - 100 பங்குகள்
    • ரூபாய் 2000.00 வரை வர்த்தகமாகும் பங்குகள் - 50 பங்குகள்
    • ரூபாய் 3000.00 வரை வர்த்தகமாகும் பங்குகள் - 25 பங்குகள்
INVESTMENT AND QUANTITY BASED ON MARGIN LIMIT:
  • நான் கணக்கிட்டுள்ள முதலீடு மற்றும் பங்கு எண்ணிக்கையானது வர்த்தகத்திற்காக தரகர் அளிக்கும் MARGIN LIMIT ஐ பொறுத்தது. நமது முதலீட்டிலிருந்து 8 முதல் 10 மடங்கு வரை வர்த்தகம் செய்ய தரகர் அனுமதிப்பார். நான் 10 மடங்கு என்று கணக்கிட்டுள்ளேன்.

OTHER IMPORTANT NOTES:
  • ஒரே பங்கில் ஒருமுறை மட்டும் வர்த்தகம் செய்வது பாதுகாப்பானது.
  • மாலை 3.00 மணி அல்லது தரகர் நிர்ணயித்துள்ள INTRADAY CLOSING TIME க்குள் வர்த்தகத்தை நாமாக முடித்துக்கொள்ள வேண்டும்.
  • ஏனென்றால் 3.15 முதல் 3.30 வரை அதிக மாறுதல்கள் இருக்கும்.
  • அந்த நேரத்தில் நாம் முடித்துக்கொள்ளாத தின வர்த்தகத்தை (INTRADAY TRADING) தரகராகவே முடித்துக்கொள்ள வாய்ப்புகள் அதிகம், இந்த விதி தரகருக்கு தரகர் மாறுபடும்.
  • இதன்மூலம் நமக்கு அதிக நஷ்டத்தையோ அல்லது லாபத்தையோ சந்திக்கக்கூடும்.


மேலும் பங்கு வர்த்தகம் குறித்த அனைத்து சந்தேகங்களுக்க்கும் pangusanthaiulagam@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.

இந்த வலைப்பக்கம் குறித்த தங்கள் கருத்துகளை COMMENT BOX இல் பதிவு செய்யவும்.

வலைப்பக்கம் பிடித்திருந்தால் நண்பர்களுக்கு SHARE பண்ணவும்

நன்றி.

வாழ்த்துக்களுடன்
பங்கு வர்த்தகம். 

1 comment: