Friday, 24 February 2012

பங்குச்சந்தை - ஓர் அறிமுகம்

பங்குச்சந்தை - இன்றைய தினத்தில் அனைவரிடமும் பரிட்சயமான சொல். முன்பெல்லாம் பங்குச்சந்தை என்றாலே என்னவென்று புரிந்துகொள்ள முடியாத புதிராக இருந்தது. ஆனால் இன்று பாமரனும் விவாதிக்கும் அளவுக்கு சாதாரண விஷயமாகிவிட்டது.

ஆனால் பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ள அனைவரும் லாபத்தை மட்டுமே ஈட்டுபவர்களல்ல. அனைவரும் ஏதாவது ஒருசில சந்தர்ப்பங்களில் நஷ்டத்தை சந்தித்தவர்களே மற்றும் சந்தித்துக் கொண்டிருப்பவர்களே. இவர்களில் பெரும்பாலானோர் பங்குச்சந்தையில் நுழையும்போது இருந்த நோக்கமானது தற்போது மாறியிருக்கும் அல்லது மாற்றப்பட்டிருக்கும்.


நானும் பங்குச்சந்தையில் தரகரின் அறிவுரைகளின் படியும், எனது முட்டாள்தனமான முடிவுகளாலும் எனது மூலதனத்தின் ஒரு பகுதியை இழந்தோம். அதன்பிறகு கிட்டத்தட்ட சிலகாலம் பங்குவர்த்தகத்தில் ஈடுபடாமல் பங்குச்சந்தை பற்றிய நுணுக்கங்களை பற்றி பல ஆராய்ச்சிகளின் மூலமும், பல நிபுணர்களின் பயிற்சி வகுப்புகளில் கலந்துரையாடல் மூலமும் அறிந்துகொண்டேன்.


என்னைப் போலவே பலரும் தங்கள் மூலதனத்தை இழந்து துன்பப்படுவதை தவிர்க்கவே இந்த வலைப்பக்கத்தை துவங்கி, இதன் மூலம் எனது வர்த்தக அனுபவத்தினால் ஏற்பட்ட பாடங்களையும், எனது பங்கு வர்த்தக பரிந்துரைகளையும் பகிர்ந்து கொள்ள முடிவு எடுத்தேன்.


இந்தப் பக்கம் வலைப்பக்க நண்பர்களாகிய உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். எனது பரிந்துரைகளில் விருப்பம் உள்ளவர்கள் வலைப்பக்கத்தை பின்தொடருங்கள் (Follower). எனது பரிந்துரைகளை நான் முழுக்க முழுக்க சேவை மனப்பான்மையுடன் மட்டுமே அளிக்கிறேன்.


எனக்கு தங்களின் கருத்துக்களை பதிவு செய்வதன்மூலம் என்னை மேலும் ஊக்கப்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.


என்றென்றும் நட்புடன்
தமிழன்

1 comment:

  1. வாழ்த்துக்கள் நண்பரே ,
    தொடருங்கள் தொடர்கிறோம் .என்றும் உங்களுடன் ..........,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
    நட்புடன் ,
    கோவை சக்தி

    ReplyDelete