Saturday 25 February 2012

27/02/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்,

எனது வலைப்பக்கத்தில் முதன்முதலாக வர்த்தகப் பரிந்துரைகளை வெளியிடுகிறேன். பரிந்துரைக்காக தேர்ந்தெடுத்துள்ள பங்குகள் அனைத்தும் நம்பத்தகுந்த மற்றும் அதிகமாக வர்த்தகமாகும் நிறுவனப் பங்குகளாகும். அந்த நிறுவனங்களைப் பற்றி இங்கு காண்போம்.



இந்த நிறுவனங்களில் JINDAL STEEL, AXIS BANK, TATA MOTORS மற்றும் ONGC ஆகிய பங்குகள் NIFTY(நிப்டி) அதாவது NSE(தேசிய பங்கு சந்தை) குறியீட்டின் 50 பங்குகளிலும்,  JINDAL STEEL, INFOSYS, TATA MOTORS மற்றும் ONGC ஆகிய பங்குகள் SENSEX (சென்செக்ஸ்) அதாவது BSE(மும்பை பங்கு சந்தை) குறியீட்டின் 30 பங்குகளிலும் உள்ள நிறுவனங்களாகும். எனவே இவற்றில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானது. நாம் எடுத்துள்ள 5 பங்குகளும் வெவ்வேறு துறையைச் சார்ந்த நிறுவனங்களாகும். 

என்னுடைய பரிந்துரைகளைப்பார்ப்பதற்கு முன் நிறுவனத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்கு கீழ்க்கண்ட வலைப்பக்கத்தைப் பார்க்கவும்.


தற்போது 27/02/2012 அன்றைய (INTRADAY) தின வர்த்தகத்திற்க்கான பரிந்துரைகளைப் பார்ப்போம்.

 

மேலே குறிப்பிட்டுள்ள பரிந்துரைகளை (INTRADAY) தின வர்த்தகத்திற்காக மட்டுமே பயன்படுத்திக்கொள்ளவும், முதலீட்டுக்கான பரிந்துரைகள் பின்பு அளிக்கப்படும். 

வர்த்தகம் செய்ய விரும்புவோர் காலை வர்த்தகம் ஆரம்பிக்கும் முன் அன்றைய வணிகம் சம்பந்தப்பட்ட செய்திகளை தெரிந்து கொண்டு, காலை 9.30 மணிவரை பங்குச்சந்தையில் மேற்கண்ட நிறுவனப்பங்குகளின் போக்கைப் பொறுத்து 9.30 மணிக்கு மேல் வர்த்தகம் செய்யவும், ஏனெனில் 9.30 மணிவரை சந்தையின் போக்கில் பல மாற்றங்கள் இருக்கக்கூடும்.

ஒவ்வொரு வர்த்தக நாளிலும், ஒரு நிறுவனத்தில் ஒரு முறைக்கு மேல் வர்த்தகம் (BUY அல்லது SELL) செய்யவேண்டாம். 

மாலை 3.00 மணிக்கு மேல் (INTRADAY CLOSING TIME) தின வர்த்தக நேரம் முடிவடையும் நேரத்திற்குள் (தரகருக்கு தரகர் வர்த்தகம் முடியும் நேரம் மாறுபடும்) வர்த்தகத்தை நாமாகவே முடித்துக் கொள்ளவேண்டும். ஏனெனில் நமது பங்கை தரகர் விற்கும்போது உள்ள விலை நமக்கு தெரியாமல் சந்தை முடியும்வரை நமக்கு தேவையில்லாத மன உளைச்சலைத் தரும்.

ஒவ்வொரு நாளின் வர்த்தக முடிவில் அந்த நாளின் முடிவுகளை இந்தப் வலைப்பக்கத்தில் வெளியிடுவேன்.

இந்த பரிந்துரைகள் உங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என நம்புகிறோம். தங்கள் மேலான கருத்துக்களை இந்த வலைப்பக்கத்திலோ அல்லது pangusanthaiulagam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமோ பதிவு செய்யவும். உங்களின் கருத்துக்கள் என்னை மென்மேலும் ஊக்கப்படுத்தும் என நம்புகிறேன்.

கவனத்துடன் முதலீடு செய்வோம்
நம் பொன்னான உழைப்பால் பெற்ற செல்வத்தைப் பெருக்குவோம்.

என்றென்றும் நட்புடன்
தமிழன்.

1 comment:

  1. வாழ்த்துக்கள் நேர்த்தியான பதிவு
    நட்புடன்,
    கோவை சக்தி

    ReplyDelete